Search This Blog

Wednesday, July 28, 2010

பயன்பாட்டுக் குறிப்புகள் - THERAPEUTIC GUIDELINES

உலகின் தொன்மையான மருத்துவ முறைகளின் சீர்மிகு மருத்துவமாக சிறந்து விளங்குவது நமது சித்த மருத்துவமே ஆகும்!
மெய்யறிவாளர்கள், ஞானச்சித்தர்கள், அருளாளர்கள் மேதினி உயிர்க்குலத்தின் நலவாழ்வு கருதி வழங்கியுள்ள மருத்துவக் கருவூலமாகும்!
இது .... மலையினும் உயர்ந்தது! கடலினும் விரிந்தது! வானோடு ஒப்பிட்டால் அந்த வானமே கூனும்.
மூலிகைச் சூரணங்கள், இளகங்கள், குடிநீர், எண்ணை, தைலம், மேழுகுகள், பற்ப செந்தூரங்கள், கட்டுக்கள், களங்குகள், அவற்றைச் செய்வதற்கான மூலகங்களின் நச்சு வீறுகளை நீக்குவதற்கான முறையான சுத்தி முறைகள் ...
பாரினில் வேறு யாரிடத்தும் இல்லாத முப்பு ‘குருச்சுண்ணங்கள்’ ‘கற்பங்கள்’ என –
அகத்தியர் – திருமூலர் – போகர் – புலிப்பாணிச் சித்தர், தேரையர், முதல் அக்கீம்பாவா (அப்துல்லா) எனும் மருத்துவ ஞானி வரை ...
கல்லாடம் முதல் ‘கண்ணுச்சாமியம்’ வரை ...
காலத்தை வென்று நிலைக்கத்தக்க அறிய மருத்துவ முறைகளை நம் முன்னோர்கள் அள்ளி வழங்கியுள்ளனர்.
‘பொதிகை’ ‘சதுரகிரி’ ‘கொல்லிமலை’ எனப் பூந்தென்றல் சுமந்தது வரும் மூலிகை மணம், முதுமைக்கே கூட முற்றுப்புள்ளி வைத்து விடக் கூடியது.
‘தீரவே தீராது’ என்றும் ‘மாறவே மாறாது’ என்றும் சிவப்பு மையினால் அடிக்கோடிடப்பட்டு விட்ட .. நாட சென்ற, முற்றிய, நலிவு நோய்கள் கூட ‘சித்தமருத்துவத்தை பத்தியத்தோடு மேற்கொண்டால் ... ‘கத்திகள்’ ‘கதிர்ச்சிகிச்சைகள்’ வேண்டாம் – என்னும் !
தொடக்க நிலையில் எங்கெங்கோ தூக்கிச் சென்று.. உயிரும் உடலும் பொருளும் ஒடுங்கிச் சோர்ந்த பின் ‘கடைசிப்புகலிடமாக’ சித்த மருத்துவத்தைக் கருதி வருகின்ற காலக் கொடுமை மாற வேண்டும்.
‘வாழ்வொழுக்கம்’ உணவுக் கட்டுப்பாடு வேறெங்கும் இவ்வளவு வலியுறுத்தப் படுவதில்லை என்பதனால் ...
தாயினும் சாலப் பரிவுடைய ‘தமிழ் மருத்துவத்தை’ தவறிக்க நினைக்கிற அறியாமை அகல வேண்டும்.
உணவுக கட்டுப்பாடு என்பது உண்ணும் மருந்துகள் உடலில் நன்கு செயல்பட வேண்டும் என்பதற்காகத்தான்.
வருமுன் காத்துக் கொள்கிற வளமை ஏற்பட வேண்டும்! மழை நாளில் குடை தேடாமல் – பழைய குடைகளை பழுது நீக்கி வைத்துக் கொள்ள பழக வேண்டும்! மருந்துப் பொருட்களின் விலைகள் மலை மேல் ஏறிக் கொண்டிருக்கின்றன.
சுக்கு – மிளகு – திப்பிலி என்னும் திரிகடுகக் கூட்டத்தில் மூன்றாவதான திப்பிலி கிலோ நானூற்று ஐம்பதில் நிற்கிறது.
பச்சை நன்னாரி வேரைப் பார்க்கவே முடியவில்லை! ‘பவழம்’ கிலோ ஆறாயிரம் ரூபாய்!
இப்படி அதிக விலையுள்ள பொருள்களை வாங்கி அணியப்படுத்தப்படுகிற சித்த மருந்துகளின் விலை மட்டும் ஏறக்கூடாதென்று எதிர்பார்த்தால் அது எப்படி சாத்தியம்?
‘ஏலக்காயும்', ‘சாதிக்காயும்’ இலவசமாக ‘குங்குமப்பூவும்’ எந்த தேவதை நமக்கு வழங்கும்?
பகலில் சூரிய வெளிச்சத்திலும், இரவில் விளக்குகளின் வெளிச்சத்திலும் மருந்து செய்யப்படுவதாக இருந்தாலும் எப்போதும் மருத்துவனின் ‘மனச்சான்றின் வெளிச்சத்தில்’ மட்டுமே மருந்துகள் உருவாக வேண்டும் புகழோடு வருகிற பொருளே போற்றுதற்குரியது.
இது உயிரோடு விளையாடும் ஒப்பற்ற வித்தை. இதை சந்தைப்படுத்துவதில் வேகம் மட்டும் போதாது! நாம் சரித்திரத்தில் நிலைக்க வேண்டும் என்ற ‘தாகமும்’ வேண்டும்.
தரத்தைப் பேணுவதே மருத்துவக் கடமை!
பிணியைப் போக்குவதே மருந்தின் சிறப்பு!
காலத்தை வென்ற ஒரு பெரும் மருத்துவத் துறையில் எளிய இளைய ‘மலைச்சாமி மூலிகைத் தாது மருந்தகம்’ தனது சுவடுகளை தங்களின் ஆதரவோடு பதிக்கிறது!
இந்த தொண்டூழியத்தின் மூலம் தனது முகமும், முகவரியும் தமிழ் மூலிகைக் கற்பமாக நிலைத்து விளங்கவும், மக்களின் உடல், மனப பிணிகள் நீங்கி, உயர் நெறிச் சிந்தனையோடு, நீடு வாழவும், அருளுமாறு சித்தர் திருவடிகளை வணங்கி வேண்டுகிறது.

மிக்க அன்புடன்,
மலைச்சாமி மூலிகைத் தாது மருந்தகம்
1/47-சண்முக விலாசம், கொழுமம் (அஞ்சல்),
உடுமலை (வட்டம்) கோவை (மாவட்டம்),
தமிழ்நாடு அஞ்சல் குறியீட்டு எண்: 642 204
தொலைபேசி: 04252 – 278946
தொலைநகல்: 04252 – 278564
மின்னஞ்சல்: mhm@yahoo.co.in
Drug Licence No. 1082

Monday, July 26, 2010

மருந்து பயன்பாட்டுக் குறிப்புக்கள் - 1

உள்ளடக்கம்
1. பயன்பாட்டுக் குறிப்புகள்
2. சூரணங்கள் - 10
3. இலகங்கள் (அல்லது) இலேகியங்கள் - 20
4. 7 வகையான மாத்திரைகள்
5. பற்ப செந்தூரங்கள் (CALXES) - 14
6. மெழுகு
7. தீநீர் (அல்லது) திராவகம், குடி நீர், மணப்பாகு
8. 11 - வகையான "தைலங்கள்"