Search This Blog

Monday, December 20, 2010

மாத்திரைகள் – 7 : 1 – பால சஞ்சீவி மாத்திரை – Bala Sanjeevi Tablet

மூல நூல்: சித்த வைத்திய திரட்டு Siddha Vaidhya Thirattu

தீரும் நோய்கள், அளவும், துணை மருந்துகளும்:

இது குழந்தைகளுக்கு நேரும், பல்வேறு பிணிகளுக்கு மருந்தாகவும், வருமுன் காப்பு முறையிலும் பயன்படும். சளி, இருமல், சுரம், செரியாமை, வயிற்றுவலி, வாந்தி ஆகியவற்றைப் போக்கும்.

அளவு:

1 வயது – 1 மாத்திரை

6 மாதம் ½ மாத்திரை

3 மாதம் ¼ மாத்திரை

வெந்நீர், தாய்ப்பால், வெற்றிலைச் சாறு, இஞ்சிச்சாறு தேன் இவற்றோடு புகட்டலாம்.

Use & Dose:

This is a familiar pediatric medicine. Cold, cough, fever, indigestion, stomach ache and vomiting.

Dose:

1 Year – 1 Tablet

½ Year – ½ Tablet

¼ Year – ¼ Tablet

Vehicle: Breast milk, milk, water, Ginger water, Honey.

Sunday, December 19, 2010

20 – பஞ்சகவ்ய கிருதம் – Pancha Kavya Kirudham

மூல நூல்: சிகித்சாரத்ன தீபம் Sikithsaarathna Deepam

தீரும் நோய்கள், அளவும், துணை மருந்துகளும்:

நாட்பட்ட சுரங்கள், வலிப்பு, காமாலை, மூளையின் மந்தநிலை ஆகியனவற்றில் நல்ல பயன் தருவது. உடலில் கேடடைந்து தேங்கிய நச்சுத்தன்மைகளை அகற்ற வல்லது. குழந்தைகளுக்கும் கொடுக்கலாம்.

அளவு: 5 மில்லி முதல் 15 மில்லி வரை வெறும் வயிற்றில் காலை கொடுத்து வரவும். அசைவம் மது முதலியனவற்றை அறவே நீக்கவும்.

Use & Dose:

Chronic fever, epilepsy, jaundice

Dose: 5 ml – 15 ml before food.

இளகங்கள் (அ) இலேகியங்கள் – 20 : 19 – திராட்சாதி கிருதம் – Dhiratchadhi Kirudham

மூல நூல்: சிகித்சாரத்ன தீபம் Sikithsaarathna Deepam

தீரும் நோய்கள், அளவும், துணை மருந்துகளும்:

குழந்தைகளுக்கு குடல் சுத்தம் தேவை எனக் கருதப்படும் போது 5 – 10 கிராம், திராட்சாதி கிருதம் மாலை (அ) இரவு வெந்நீருடன் கொடுக்கவும். சிறு அளவில் அன்றாடமும் கொடுக்கலாம்.

Use & Dose:

Recommended in children’s purgation

Dose: 5 – 10 gms.