Search This Blog

Tuesday, August 31, 2010

இளகங்கள் (அ) இலேகியங்கள் – 20 : 04 – கருணை இளகம் – Karunai Lehiyam

மூல நூல்: கண்ணுச்சாமி வைத்திய சேகரம் Kannusamy Vaithiya Sekaram

தீரும் நோய்கள், அளவும், துணை மருந்துகளும்:

வேறு எந்த மருந்தையும் விட, மூல நோய்க்கு இது முதன்மையாகக் கருதப்படுகிறது. குருதி மூலம், சீழ் மூலம், உள் மூலம், வெளி மூலம் என நவ மூலம் நீங்கும்.

அளவு: 10 முதல் 15 கிராம் அளவு மோரில் கறிவேப்பிலை இட்டுக் கொதிக்க வைத்து ஆறிய பின் காலையும், பசும்பாலுடன் மாலையும் அருந்தவும். பச்சை மிளகாய், அசைவம் விலக்கவும். பசு மோர், பால், இளநீர் சேர்க்கவும்.

Use & Dose:

No other medicine is as familiar as this in all kinds of piles, fistula and other anorectal disease.

Dose: 10 – 15 gms morning after breakfast.

Vehicle: Boiled butter milk with curry leaves (morning), cow’s milk (evening).

NB: i) More of butter milk and tender coconut must be added.

ii) Excessive chillies and non vegetarian foods should be avoided.

Monday, August 30, 2010

இளகங்கள் (அ) இலேகியங்கள் – 20 : 03 – இராச வல்லாதி – Rasa Valladhi

மூல நூல்: போகர் ஏழாயிரம் Bhokar - 7000

தீரும் நோய்கள், அளவும், துணை மருந்துகளும்:

ஆரம்ப காலப் புற்று நோய்கள், கட்டிகள், வெள்ளை வெட்டை, இராச பிளவை, கால் கை வலிப்பு, கருப்பாயசச் சீர்கேடுகள், பவுத்திரம், விரைவாதம், முகக்களை மங்கல், வெண் புள்ளி, படைகள், கிரந்திகள், எலும்புக்கும் இருக்கும் நோவு, நரம்பு வாதம், கட்டிகள், ஆகியனவும் இன்னும் பற்பல கொடிய நோய்கள் கடிவிடங்களும் நீங்கும். அறிவாற்றல், உடல்வன்மை, ஆளுமை நல்வாழ்வு, வாழ்நாளும் ஓங்கும். மருந்துண்ணுங் காலத்தில் அசைவம், கடுகு, தக்காளி, நல்லெண்ணெய், அகத்திக்கீரை, பாகற்காய், சேம்பு, சேனை, மொச்சை, தட்டை போன்றனவற்றையும், எருமைப்பால், மது, புகையிலை போன்றவற்றையும் அவசியம் நீக்க வேண்டும். புலியை சிறிது சூடாக்கி எடுத்து வைத்துக் கொண்டு உணவில் பயன்படுத்தலாம்.

வாரம் ஒரு நாள் மருந்தை நிறுத்தி விட்டு நன்கு கழிச்சல் ஆக்கிக் குடல் தூய்மை பெறுதல் வேண்டும். (உம்) பாலில்லாத காப்பி (அ) பாலில் (அ) தனியாக அவரவர் தகுதியறிந்து ஆமணக்கு எண்ணெய் எனப்படும் விளக்கெண்ணெய் ஓரிரு தேக்கரண்டி கலந்து உள்ளுக்கு காலை வெறும் வயிற்றில் அருந்துவது நலம் தரும். உண்ணத்தக்கனவாகக் கொள்ளப்படும்: அவரை, துவரை, பாசிபயறு, கறுப்புக் கொன்றக்கடலை (சுண்டல்), கத்திரிப்பிஞ்சு, கோவைக்காய், மணித் தக்காளி (சுக்குட்டிக்கீரை), அரைக்கீரை, முளைக்கீரை, முருங்கைக்கீரை, முருங்கைப் பிஞ்சு, வாழைப்பூ, பீர்க்கு, புடல், சுரை, வெண் பூசணி (சாம்பல் பூசணி), பீட்ரூட், உருளைக்கிழங்கு, முள்ளங்கி, காரட், கருணைக் கிழங்கு, கறிவேப்பிலை, மல்லிக்கீரை, பூண்டு, வெந்தயம், சீரகம், சோம்பு ஆகியனவற்றை உண்ணலாம். தோல் நோய் உள்ளவர் விளக்கெண்ணையை வாரம் இரு முறை உடலெங்கும் பூசி, ஊறின பின் கடலை மாவு, பயற்ற மாவு, இலுப்பை பிண்ணாக்கு போன்றவற்றைப் பயன்படுத்தி வர விரைந்து நலம் பெறலாம். (சோப்பு கூடாது). பசுவின் பால் காய்ச்சி, பனங் கற்கண்டு சேர்த்துப் பருகுதல் வேண்டும். வெள்ளைச் சர்க்கரையை விலக்குவதே நலம். இராசவல்லாதி போன்ற பெரு மருந்தை மருத்துவர் அறிவுரையில் பத்தியம் காத்து உண்ண வேண்டும். கடுமையான பிணிகளை வெல்லக் கடுமையான மருந்துகளும் தேவைப்படுகிறது. இதனைத் தக்க துணை மருந்துகளுடன் நமது சித்த மருத்துவ வித்தகர்கள் பயன்படுத்தி புகழும், பொருளும் பெற்றுச் சிறப்புறுவார்கள் என்பது திண்ணம்.

அளவு: காலை உணவுக்குப் பின் 2.5 கிராம் முதல் 5 கிராம் வரை உண்டு 200 மில்லி அளவு பசும் பாலுடன் வல்லாரை, ஆமலகம், வில்வாதி, மகாவில்வாதி, பறங்கிப் பட்டை, பஞ்சகவ்வியம் போன்ற மருத்துவர் தேர்வு செய்யும் ஒரு மருந்தை உண்ணலாம். சுண்ணலோகம், அன்னபவழம், மண்டூரம், இலிங்கம், மன்மத லோகம், பஞ்சபாடணம் ஆகிய செந்தூரங்களில் ஏதேனும் ஒன்று: இந்திராதி, திருமேனி, கதலி ஆகிய தீநீர்களில் ஏதேனும் ஒன்று சேர்த்தும், நோய் நிலை, உடல் நிலை அறிந்து மருத்துவர்கள் வழங்கலாம்.

Use & Dose:

Early stage of cancer, all types of tumours, leucorrhoea,Gonorrhoea, Carbuncies, Vaginal Disorders, Convulsions, Diabetes Mellitus, Facial paralysis, Patches, Scales, Cracks in feet, Anal fistula, Poisons of spiders, rats and scorpions, neurological disorders, penis ulcer and hemiplegia.

Dose: Adults 2.5 grams to 5 grams once a day (morning) for first week (7 days).

Vehicle: Cow’s milk

Adjuvants: VALLARAI, AMALAGAM, BILWATHI, MAHABILWATHI, PARANGIPATTAI, PANJAKAVIYAM (Any one as directed by physician). Every week stop this medicine for one day and take one or two teaspoon of castor oil (depending upon the patients) for purgation. After two weeks 2.5 to 5 grams two times a day with Cow’s milk along with above prescribed medicine. Purgation is an important purification treatment. It detoxifies the entire body. Once in a week take one or two teaspoonful of castor oil with or without black coffee and it in turn purgates. Avoid all medications during that day. All the rules given above must be strictly followed.

Only a Siddha physician can avail this drug without any side effects and save million of ailing people.

Sunday, August 29, 2010

இளகங்கள் (அ) இலேகியங்கள் – 20 : 02 – அசுவகந்தி இளகம் – Amalaga Lehiyam

மூல நூல்: அனுபவ முறை - Siddha Proprietary Medicine of Malaisami Herbo Minerals

தீரும் நோய்கள், அளவும், துணை மருந்துகளும்:

பித்தத்தினால் எற்படுகிற பிணிகளை நீக்கும். கை, பாதம், நெஞ்சு எரிதல்; கண்களில் எரிச்சல், நீக்குவதோடு, கண்பார்வை அதிகப்படும். கண் சம்பந்தப்பட்ட பல நோய்கள் தீரும். தொடர்ந்து உண்டு வர கண் புரை நீங்கும். குடற்புண்கள், எரிகுன்மம், பசியின்மை ஆகியனவற்றையும் போக்கும்.

அளவு: 5 முதல் 10 கிராம் நாளில் இருமுறை உணவுக்கு முன்பு அல்லது பின்பு.

துணை மருந்து: பசும் பால் அல்லது தண்ணீர்.

Use & Dose:

This is extremely useful in Pitha diseases, heart burn and eye burning sensation and good for all eye ailments. Specially prescribed for cataract in daily use. Peptic ulcers and indigestion.

Dose: 5-10 gms with cow’s milk or water, two times a day, after or before meals.

Thursday, August 26, 2010

இளகங்கள் (அ) இலேகியங்கள் – 20 : 01 – அசுவகந்தி இளகம் – Aswaganthi Lehiyam

மூல நூல்: அனுபவ முறை - Siddha Proprietary Medicine of Malaisami Herbo Minerals

தீரும் நோய்கள், அளவும், துணை மருந்துகளும்:

இழந்த உயிர்ச்சக்தியை உடலுக்கு மீட்டுத் தரவல்லது! அளவுக்கு மிஞ்சிய உழைப்பு, உடலுறவு ஆகியனவற்றால் நேர்ந்த தளர்ச்சியை நீக்கி நோய் எதிர்ப்புத் தன்மையை ஏற்படச் செய்வது. அடிக்கடி நேரும் சளித்தொற்றுகள், குழந்தைகளின் வளர்ச்சி குறைவு நீக்கி புத்துணர்ச்சியையும், பொலிவையும் அளிக்க வல்லது. குழந்தைகளுக்கு பெரியவர் பசும் பால் பருகச் செய்ய வேண்டும்.

அளவு: 10 முதல் 15 கிராம் காலை, மாலை உணவுக்கு பின்.

துணை மருந்து: காய்ச்சிய பசும் பால் பனை வெல்லம் சேர்த்துப் பருகவும்.

Use & Dose:

Reputed to develop virility. This is a blessing to those debilitated by excessive work or sex. This develops masculinity and strength of all sense organs. Quickly relieves Asthma and cough also.

Dose: 10-15 gms. Morning & evening after food with cow’s milk. For children, half of the dose with cow’s milk.

Sunday, August 22, 2010

சூரணங்கள் – 10 : 10 – மதுமேகப் பட்டைச் சூரணம் – Madhu Mega Pattai Churanam

ஆதாரம்: சித்த வைத்தியத் திரட்டு

தீரும் நோய்கள், அளவும், துணை மருந்துகளும்:

காலை வெறும் வயிற்றில் மது மேகம் என்னும் சர்க்கரை நோயினர், பச்சை மஞ்சள் சாறு அல்லது மஞ்சள் அரை தேக்கரண்டி இட்டு ½ குவளை நீரை காய்ச்சி ஆரிய குடிநீரில் அல்லது தக்க துணை மருந்துகளுடன் 5-10 முதல் கிராம் சூரணத்தைச் சேர்த்து உண்ணலாம்.

Use & Dose:

Diabetes

Dose: 5 – 10 gms

Vehicle: Turmeric Juice or Turmeric decoction.

Thursday, August 19, 2010

சூரணங்கள் – 10 : 09 – நெல்லிக்காய்ச் சூரணம் – Nellikai Churanam

ஆதாரம்: சித்த வைத்தியத் திரட்டு

தீரும் நோய்கள், அளவும், துணை மருந்துகளும்:

இது ஏழு தாதுக்களையும், திசுக்களையும் செழுமைப்படுத்துகிறது. வைட்டமின் சி நிறைந்தது. குழந்தைகளின் வளர்ச்சிக் குறைவு, முதியவர்களின் அசதி, இவை மாறும். கண் நோய்கள், கண் புரை, ஆகியனவற்றில் அன்றாடம் இதனைப் பயன்படுத்தப் பிரிவு செய்யலாம்.

அளவு: 5 முதல் 10 கிராம் நாளில் 1 2 முறைகள்.

துணை மருந்து: பசும் பால் அல்லது தண்ணீர்.

Use & Dose:

Rich content of vitamin ‘C’. Revitalizes all seven constituent tissues of the body. It improves proper development of children and warding off weakness in the aged. Improves vision of eyes.

Dose: 5 – 10 gms

Vehicle: Milk or water

Wednesday, August 18, 2010

சூரணங்கள் – 10 : 08 – நில ஆவரைச் சூரணம் – Nila Avarai Churanam

ஆதாரம்: சித்த வைத்தியத் திரட்டு

தீரும் நோய்கள், அளவும், துணை மருந்துகளும்:

மலச்சிக்கல் நீங்க இதனை அன்றாடம் பயன்படுத்துவது நல்லது. அமிலச் சுரப்பைக் குறைத்து கழிவுகளை நன்கு வெளியாக்கும். இரவு படுக்கைக்குச் செல்லும் முன் 5-10 கிராம், வெந்நீருடன் கலந்து பருகவும்.

Use & Dose:

Constipation and ascites. It is a suitable laxative.

Dose: 5 – 10 gms

Vehicle: Hot water at bed time

Tuesday, August 17, 2010

சூரணங்கள் – 10 : 07 – பிரண்டைச் சூரணம் – Pirandai Churanam

ஆதாரம்: சித்த வைத்தியத் திரட்டு

தீரும் நோய்கள், அளவும், துணை மருந்துகளும்:

செரிப்புத் தன்மை குறைதல், குடல்களின் செயல்பாட்டில் மந்தம், வயிற்று வலி, வாய்வுக் கோளாறுகள் உள்ள போது கறிவேப்பிலை சிறிது சேர்த்துக் காய்ச்சிய மோருடன் 5 கிராம் சூரணத்தை நாளில் 1-2 முறைகள் உண்ணவும்.

Use & Dose:

Stomach ache, indigestion, flatulence

Dose: 5 gms

Vehicle: Butter milk boiled with curry leaves

Monday, August 16, 2010

சூரணங்கள் – 10 : 06 – பறங்கிப்பட்டைச் சூரணம் – Parankipattai Churanam

ஆதாரம்: சித்த வைத்தியத் திரட்டு

தீரும் நோய்கள், அளவும், துணை மருந்துகளும்:

தோல் நோய்களில் இணையில்லாத பயன் தருவது. அரிப்பு, புண்கள், கொப்புளங்கள், செதில்கள் ஆகியனவற்றிலும் குணமளிக்கிறது. 5 முதல் 10 கிராம் நமது திருமேனி திராவகம் சேர்த்துப் பயன்படுத்த மிகுந்த பயன் தரும்.

Use & Dose:

Itches, wounds, boils and scabies. This is excellent in all skin diseases.

Dose: 5-10 gms

Adjuvant: “thirumeni Thiravagam” heals all types of wounds.

Thursday, August 5, 2010

சூரணங்கள் – 10 : 05 – தாளிசாதிச் சூரணம் – Thalisathi Churanam

ஆதாரம்: சித்த வைத்தியத் திரட்டு

தீரும் நோய்கள், அளவும், துணை மருந்துகளும்:

செரிமானத்தை மேம்படுத்தும்: காச நோயைக் கட்டுப்படுத்தும். இருமல், கக்கல், மண்ணீரல் சீர்கேடுகளிலும், மார்பு வலி, சோகை, வயிற்றுப் போக்கின் போதும் பயன்படும். தேன் அல்லது நெய்யுடன் 5 முதல் 10 கிராம் உண்ணலாம். இடைவெளிகளில் 2-3 முறை ஒரு நாளில் பயன்படுத்தலாம்.

Use & Dose:

Cough, Stomach ache, liver, spleen disorder, chronic diarrhoea. Enhances digestion and helps bowel movements.

Dose: 5-10 gms

Vehicle: Honey or Ghee.

Wednesday, August 4, 2010

சூரணங்கள் – 10 : 04 – திரிபலாச் சூரணம் – Thiripala Churanam

ஆதாரம்: சித்த வைத்தியத் திரட்டு

தீரும் நோய்கள், அளவும், துணை மருந்துகளும்:

கண் பார்வை குறைவு, ஈறுகளில் இரத்தம் கசிதல், பலவகை ஈறுக்கசிவு ஆகியனவற்றில் மிகவும் சிறப்பாகச் செயல்படும். தேன், வெந்நீர் ஆகியன துணை மருந்துகள்.

Use & Dose:

Very efficacy in bleeding gums and eye ailments.

Dose: 3-5 gms

Vehicle: Honey or hot water

Tuesday, August 3, 2010

சூரணங்கள் – 10 : 03 – திரிகடுகச் சூரணம் – Thirikadugu Churanam

Text: Siddha formulary of India Part I

தீரும் நோய்கள், அளவும், துணை மருந்துகளும்:

செரிமானம் தரும், அகத்து வாய்வை அகற்றும், சுரம் நீக்கும், அனைத்து மருந்துகளுடனும், துணை மருந்தாக 2-3 கிராம் வீதம், நாளில் 2-3 முறை வெந்நீருடன் உட்கொள்ளலாம்.

Use & Dose:

Fever. It is a carminative & digestive. A best adjuvant along with other medicines.

Dose: 2-3 gms

Vehicle: Hot water.

Monday, August 2, 2010

சூரணங்கள் – 10 : 02 – அட்டச் சூரணம் – Atta Churanam

ஆதாரம்: சித்த வைத்தியத் திரட்டு

தீரும் நோய்கள், அளவும், துணை மருந்துகளும்:

வயிற்றுப்பிசம், வயிற்று வலி, செரியாமை நீங்கும், 2 முதல் 5 கிராம் அளவு உண்டு மேல் தோல் சீவிய சுக்கு, கறிவேப்பிலை, இட்டுக் காய்ச்சிய மோர், அல்லது வெந்நீருடன் உணவுக்கு முன் அருந்தவும்.

Use & Dose:

Stomach ache, indigestion and loss of appetite.

Dose: 2-5 gms before food

Vehicle: Boiled butter milk with dry ginger and curry leaves.

Sunday, August 1, 2010

சூரணங்கள் – 10 : 01 – அமுக்குராச் சூரணம் – Amukkura Churanam

ஆதாரம்: “சித்த வைத்தியத் திரட்டு”

தீரும் நோய்கள், அளவும், துணை மருந்துகளும்:
பசியைத் தூண்டும்: உடலுக்கு வலிமை தரும். ஒரு தேக் கரண்டி சூரணத்தை, ½ குவளை பசும்பாலில், ½ குவளை நீர் சேர்த்துக் கொதிக்க வைத்து ஆறிய பின் பனை வெல்லம் சேர்த்துப் பருகவும்.

Use & Dose:
Appetizer, improves strength of body.
Dose: 2-3 gms
Mode of use: Take ½ cup of cow’s milk with equal amount of water and put one teaspoonful of chooranam then boil it. Add palm sugar and make it cool and take it.