Search This Blog

Sunday, March 27, 2011

‘வெந்தயம்’ (Trigonella Foenum) FENUGREEK

இதை எப்படிப் பக்குவப்படுத்தி உண்டாலும், ஏதேனும் பயன் தரும். வெந்த + அயம் என்ற பெயரிலேயே அயம் இரும்புச் சத்துத் தரவல்லது என்பதனை எளிதில் அறியலாம்.

இரவில் வெந்தயத்தை நீரில் ஊற வைத்து காலை அந்த நீரைப் பருகி வரலாம். குழ்ம்பாகச் சமைத்து உண்ணலாம். வெந்தயக் கீரையை வெவ்வேறு பக்குவங்களில் செய்தும் உண்ணலாம். வெறும் வெந்தயத்தை வாயிலிட்டு மென்று தண்ணீர் குடிக்கலாம்.

சில முறைகளில் சரிவிகிதமும் சிலமுறைகளில் சதவீதமும் இதன் சத்து உடலுக்குக் கிடைக்கிறது. ஆனால் முழுமையாக இதன் பயனை அடைய விரும்புவோர் கீழ்க்காணும் முறையில் அணியப்படுத்திக் கொள்வதே சிறந்தது.

ஒரு பருத்தித் துணியினால் வேண்டிய அளவு வெந்தயத்தை எடுத்துக் கொண்டு, கட்டுச் சோறு கட்டுவது போல குறுகலாக கட்டாமல், தொட்டில் சீலை போல தலைப்புப் பகுதியில் நான்கு, ஐந்து விரலிடை தளர்ச்சியாக விட்டுக் கட்டி, முதல் னால் இரவு அதைத் தண்ணீரினுள் போட்டு வைத்திருந்து, மறுநாள் அதை எடுத்து இயன்றளவு அதிலுள்ள தண்ணீரை வடியச் செய்து கொண்டு, ஒரு மூடியுள்ள பாத்திரத்தில், காற்றும் வெளிச்சமும், கிடைக்காதபடி மூடி வைத்து, ஒரு மணி நேரமாவது ஒரு மூட்டம் கொடுத்து, அதன் பின், வீட்டில் நிழலில் ஒரு பிரம்பு (மூங்கில்) கூடை ஒன்றின் மீது தண்ணீர் வடியக் கூடியதுமான ஒரு பருத்தித் துணியை விரித்துக் கொண்டு அதன் மீது பக்குவப்படுத்தி வைத்திருக்கும் வெந்தயத்தை விதை தெளிப்பதைப் போல பரவலாகத் தூவி விடுங்கள். நான்கு நாட்களில் முளை அரும்பிய பின் காலை வேளை வெறும் வயிற்றில் ஒன்றிரண்டு தேக்கரண்டி மென்று, தின்று தண்ணீர் குடித்து வாருங்கள்.

உடலசதி, மூலச்சூடு, கண்களில் எரிவு, குடல் புண்கள், சர்க்கரை நோய், விந்துச் சூடு எல்லாம் இந்த வெந்தயத்தோடு பந்தயம் கட்ட முடியாமல் தோற்று ஓடி விடும்.

முடக்கற்றான் குடிநீர் - Paralysis Medicine

கை, கால்களை நீட்டவும், மடக்கவும் முடியாமல் முடமாக்குகிற வாத நோயை முடக்கு வாதம் என்று கூறுவது வழக்கம்.

இந்த முடக்கை அற்றுப் போகச் செய்கிற கொடிக்கு முடக்கற்றான் முடக்கறுத்தான் என்றெல்லாம் கூறுவார்கள். CARDIOSPERMUM HELICACABUM – என்பது இதன் தாவர இயற்பெயராகும்.

சிற்றூர்கள் செழித்த நகரங்கள் எனப் பாராமல் எல்லா இடங்களிலுமே இது வளர்கிறது.

  1. இந்த முடக்கற்றான் இல்லை ஒரு திமிர் கைப்பிடி அளவு என்பது இதற்கு மேல் அள்ளி எடுக்க இயலாது என்கிற அளவில் கை நிறையத் திமிர திமிர அள்ள எடுப்பதை மேற்கண்ட அளவாகக் கொண்டு:
  2. கட்டை விரலளவு சுக்கு இதை எப்போது பயன்படுத்தினாலும் இதன் மேல் தோலை நீக்கி விட வேண்டும்.
  3. குறுமிளகு 15 கிராம்.
  4. வெள்ளைப் பூண்டு பருமனாக இருந்தால் 3, சிறியதாக இருந்தால் 5.

மேல் தோல் நீக்கி முன், சுக்கு மிளகு, பூண்டு ஆகியனவற்றையும் ஒன்றிரண்டாகத் தட்டிப் போட்டு ஒரு பழகின மண் கலத்தில் இந்த நான்கு சரக்குகளையும் போட்டு, 8 குவளை (டம்ளர்) தண்ணீர் சேர்த்து மூடி வைத்து, ஒரு குவளை ஆகும் படி சிறு தீயில் எரிந்து வற்ற வைத்துக் கொண்டு ஆறிய பின் காலை வெறும் வயிற்றில் 3 முதல் 5 நாள் ஒரு குவளை அளவு குடித்தால் உடல் வலி, முடக்கு ஓடிப்போகும். வாய்ப்பும், நேரமும் உள்ளவர்கள் இதைச் செய்து, அருந்திப் பயன் பெறலாம்.

மற்றவர்கள் ....?

முடக்கற்றான் சூரணத்தை நாட்டு மருந்து கடையில் வாங்கி சுக்கு, மிளகு, பூண்டு சேர்த்து எட்டுக் குவளை தண்ணீர் சேர்த்து ஒரு குவளையாக சுண்ட வைத்து காலை வெறும் வயிற்றில் அருந்தி வரலாம்.

பொது அறிவுரை

உருளைக் கிழங்கைத் தோலோடு சமைத்து உண்பதே சிறந்தது!

தயிர் உண்பதைத் தவிர்க்கவும்! மோரை அதிகம் பயன்படுத்தலாம்!

கீரையும், மோரும் இரவில் தவிர்க்கலாம்!

பச்சைத் தங்கமாம் கீரையை பகலில் புசிக்க வேண்டும்!

காயமிட்டுக் கடைந்த கீரை நலந்தரும்!

வெள்ளைப் பூண்டு இதயத்திற்கு நலம் தருவது! கொழுப்பைக் குறைப்பது!

11 – (சித்த) பலாத் தைலம், (Siddha) Bala Thailam

பெயர்

11 (சித்த) பலாத் தைலம்

மூல நூல்

இந்திய அரசின் சித்த மருத்துவச் செய்முறை

தீரும் நோய்கள்

பக்க வாதம், தளர் வாதம், துடி வாதம், முக வாதம், நாக்குப் புரட்டல் வாதம், குடலிறக்கம் விரைவாதம், செவிக்குத்து. எழு ஞாயிறு எனும் காலை நேரத் தலைவலி படு ஞாயிறு எனும் மாலை நேரத் தலைவலி, கருப்பாயாசச் சீர்கேடுகள், ஆகியனவற்றை விரைவில் போக்கி உடல் நலம் காக்கும் தைலமாகும். 101 – முறை மடக்குத் தைலமாக அணியமானது.

துணை உணவு

துணை மருந்து

சீரகத்தை குறைந்தது நான்கு, ஐந்து முறை கொதிக்க வைத்து ஆறிய குடிநீர் அணியப்படுத்திக் கொண்டு அதில் மேற்கூறிய அளவு தைலம் சேர்த்துப் பருகுதல் வேண்டும்

அளவு

5 முதல் 10 மில்லி நாளில் ஒன்று அல்லது இரண்டு முறை.

Name

11 – (Siddha) Bala Thailam

Source Book

Siddha Formulary of India Part – 1

Use

Many ailments like vata, heniplegia, gulma, vaginal disorders, facial paralysis, cataract, ear ache. In short, this is the recourse in any ailment connected with vata.

Vehicle

Adjuvant

Cumin seed decoction – 5 fold

Dose

5 – 10 ml once or twice daily

10 – கண எண்ணெய், Kana Ennai

பெயர்

10 கண எண்ணெய்

மூல நூல்

சித்த வைத்தியத் திரட்டு

தீரும் நோய்கள்

பெரியவர்கள், குழந்தைகள் ஆகியோர் அன்றாடம் இரவு இதனை அருந்தி வர உடற் சூடு, மலச்சிக்கல், தோல் நோய்கள் நீங்கும்.

துணை உணவு

துணை மருந்து

அளவு

இரவு உணவுக்குப் பின் அரை முதல் ஒரு தேக்கரண்டி அருந்தி வரவும்.

Name

10 – Kana Ennai

Source Book

Siddha Vaithiya Thirattu

Use

Excellent purgative for all ages including children. Constipation, skin ailments, excessive body heat.

Vehicle

Adjuvant

Dose

½ - 1 teaspoonful after food at bed time.

9 – சுக்குத் தைலம், Sukku Thailam

பெயர்

9 சுக்குத் தைலம்

மூல நூல்

சித்த வைத்தியத் திரட்டு

தீரும் நோய்கள்

தலைவலி, பல்வலி, செவிக் குத்தல், தொண்டை வலி, குரல் கம்மல் மற்றும் வாத வலிகளைப் போக்கும்.

துணை உணவு

துணை மருந்து

அளவு

கார்க்லிங் (அ) பாதிக்கப் பட்ட இடங்களின் வெளியில் பூசவும்

Name

9 – Sukku Thailam

Source Book

Siddha Vaithiya Thirattu

Use

Head ache, tooth ache, ear pain, throat pain, sore throat

Vehicle

Adjuvant

Dose

Gargling or apply over the affected area

8 – நொச்சித் தைலம், Nochchi Thailam

பெயர்

8 நொச்சித் தைலம்

மூல நூல்

சித்த வைத்தியத் திரட்டு

தீரும் நோய்கள்

சளி, தலைவலி, தலைபாரம், மூக்கடைப்பு ஆகியன குணம் பெறும்.

துணை உணவு

துணை மருந்து

அளவு

வெளி உபயோகத்திற்கு மட்டும். நசியம், சொட்டு மருந்து, வெளிப்பூச்சு

Name

8 – Nochchi Thailam

Source Book

Siddha Vaithiya Thirattu

Use

Head ache, nasal catarrh, cold

Vehicle

Adjuvant

Dose

External Use Only. Nasal drops