Search This Blog

Monday, September 27, 2010

இளகங்கள் (அ) இலேகியங்கள் – 20 : 08 – பறங்கிப்பட்டை இளகம் – Parankipattai Lehiyam

மூல நூல்: அனுபவ முறை மலைச்சாமி மூலிகைத் தாது மருந்தகம் Siddha Proprietary Medicine

தீரும் நோய்கள், அளவும், துணை மருந்துகளும்:

புரை இரணங்கள், மேக நோய்கள், ஊறல், புடைப்பு, அரிப்பு ஆகிய நாட்சென்ற தோல் நோய்களைப் போக்க வல்லது. இரத்தத்தைச் சுத்தப்படுத்துவது.

அளவு: 5 முதல் 10 கிராம்

துணை மருந்து: தேன் (அ) பசுவின் பால். இராச வல்லாதி, நரசிங்காதி, வல்லாரை, கடுக்காய், ஆமலகம், இந்திராதித் தீநீர், திருமேனித் திராவகம் ஆகியனவற்றில் ஏதேனும் துணையாகக் கொள்ள விரைந்து நலம் பெறலாம்.

Use & Dose:

Chronic wounds, boils, patches, scales, itches, abscesses.

Dose: 5 – 10 gms

Vehicle: Honey, cow’s milk

Adjuvants: “Rasa Valladhi”, “Narasinghadhi”, “Vallarai”, “Kadukkai”, “Amalagam” or “Indhiradi”, “Thirumeni” like Kudineers

Wednesday, September 8, 2010

இளகங்கள் (அ) இலேகியங்கள் – 20 : 07 – பெருங்காய இளகம் – Perungaya Lehiyam

மூல நூல்: பதினெண் சித்தர் வைத்தியச் சில்லரைக் கோர்வை பாகம் - 1” 18 Siddhar Vaithiyar Sillaraik Korvai Part - 1

தீரும் நோய்கள், அளவும், துணை மருந்துகளும்:

உடல் வலி, வாய்வுக் கோளாறு, குடலிறக்கம், அண்டவாதம், மலச்சிக்கல், பசிகுறைவு நீங்கும். பெண்களுக்கு மாதவிலக்குக் காலத்தில் முதுகு, கடுப்பு, வயிறு ஆகிய இடங்களில் ஏற்படும் வலி நீங்கும். குடற்புண்கள் ஆறும்.

அளவு: 5 முதல் 10 கிராம் காலை, மாலை உணவுக்குப் பின்.

துணை மருந்து: வெந்நீர் (அ) மகளிர் நல்வாழ்வு இளகம் (Shree Care)

Use & Dose:

Back ache, lower abdominal pain, lumbosacral pain during menustration, flatulence, Hernia, peptic ulcers, loss of appetite, gastritis.

Dose: 5 – 10 gms twice a day.

Adjuvants: “Shree Care” @ Magalir Nal Vazhvu Lehiyam

Monday, September 6, 2010

இளகங்கள் (அ) இலேகியங்கள் – 20 : 06 – கண்டங்கத்திரி இளகம் – Kandankathri Lehiyam

மூல நூல்: இந்திய அரசின் சித்த மருத்துவச் செய்முறை பாகம் - 1” Indian Government’s Siddha Medicine Recipe Part - 1

தீரும் நோய்கள், அளவும், துணை மருந்துகளும்:

மூச்சுத் திணறல், இருமல், சளி, சுரம் ஆகியன நீங்கும்.

அளவு: 5 முதல் 7 கிராம் காலை, மாலை உண்டு வெந்நீர் குடிக்கவும்.

துணை மருந்து: அசுவகந்தி இளகம் (அ) தூதுவளை இளகம் பசும் பாலுடன் துணை மருந்தாகவும், சித்தர் மூலத்தைலம் எண்ணெய்க் குளியலுக்கும் பயன்படுத்தலாம்.

Use & Dose:

Cough, Cold, Fever, Bronchitis, Bronchial asthma

Dose: 5 – 7 gms twice a day.

Adjuvants: “Aswaghandi”, Thoothuvalai Ilagam.

N.B. Twice in a week oiil bath with “Siddhar moola thailam” is advisable.


Wednesday, September 1, 2010

இளகங்கள் (அ) இலேகியங்கள் – 20 : 05 – கடுக்காய் இளகம் – Kadukkai Lehiyam

மூல நூல்: அனுபவ முறை - Siddha Proprietary Medicine of Malaisami Herbo Minerals

தீரும் நோய்கள், அளவும், துணை மருந்துகளும்:

குடற் புண்கள், தலை மயக்கம், இளநரை, கொப்புளங்கள் நீங்கும். குருதி தூய்மை பெறும். மலச்சிக்கல் நீங்கும்.

அளவு: 5 முதல் 10 கிராம் காலை உணவுக்குப் பின்னும் மாலையும்.

துணை மருந்து: கருணை இளகம் (அ) வல்லாரை இளகம் ஆகியனவற்றைத் துணை மருந்தாகவும் பயன்படுத்தலாம்.

Use & Dose:

Peptic ulcers, constipation, piles, giddiness, premature graying of hair, boils, burns and blood discaries

Dose: 5 – 10 gms twice a day.

Vehicle: Water and Karunai or Vallarai Ilagam.