Search This Blog

Monday, August 30, 2010

இளகங்கள் (அ) இலேகியங்கள் – 20 : 03 – இராச வல்லாதி – Rasa Valladhi

மூல நூல்: போகர் ஏழாயிரம் Bhokar - 7000

தீரும் நோய்கள், அளவும், துணை மருந்துகளும்:

ஆரம்ப காலப் புற்று நோய்கள், கட்டிகள், வெள்ளை வெட்டை, இராச பிளவை, கால் கை வலிப்பு, கருப்பாயசச் சீர்கேடுகள், பவுத்திரம், விரைவாதம், முகக்களை மங்கல், வெண் புள்ளி, படைகள், கிரந்திகள், எலும்புக்கும் இருக்கும் நோவு, நரம்பு வாதம், கட்டிகள், ஆகியனவும் இன்னும் பற்பல கொடிய நோய்கள் கடிவிடங்களும் நீங்கும். அறிவாற்றல், உடல்வன்மை, ஆளுமை நல்வாழ்வு, வாழ்நாளும் ஓங்கும். மருந்துண்ணுங் காலத்தில் அசைவம், கடுகு, தக்காளி, நல்லெண்ணெய், அகத்திக்கீரை, பாகற்காய், சேம்பு, சேனை, மொச்சை, தட்டை போன்றனவற்றையும், எருமைப்பால், மது, புகையிலை போன்றவற்றையும் அவசியம் நீக்க வேண்டும். புலியை சிறிது சூடாக்கி எடுத்து வைத்துக் கொண்டு உணவில் பயன்படுத்தலாம்.

வாரம் ஒரு நாள் மருந்தை நிறுத்தி விட்டு நன்கு கழிச்சல் ஆக்கிக் குடல் தூய்மை பெறுதல் வேண்டும். (உம்) பாலில்லாத காப்பி (அ) பாலில் (அ) தனியாக அவரவர் தகுதியறிந்து ஆமணக்கு எண்ணெய் எனப்படும் விளக்கெண்ணெய் ஓரிரு தேக்கரண்டி கலந்து உள்ளுக்கு காலை வெறும் வயிற்றில் அருந்துவது நலம் தரும். உண்ணத்தக்கனவாகக் கொள்ளப்படும்: அவரை, துவரை, பாசிபயறு, கறுப்புக் கொன்றக்கடலை (சுண்டல்), கத்திரிப்பிஞ்சு, கோவைக்காய், மணித் தக்காளி (சுக்குட்டிக்கீரை), அரைக்கீரை, முளைக்கீரை, முருங்கைக்கீரை, முருங்கைப் பிஞ்சு, வாழைப்பூ, பீர்க்கு, புடல், சுரை, வெண் பூசணி (சாம்பல் பூசணி), பீட்ரூட், உருளைக்கிழங்கு, முள்ளங்கி, காரட், கருணைக் கிழங்கு, கறிவேப்பிலை, மல்லிக்கீரை, பூண்டு, வெந்தயம், சீரகம், சோம்பு ஆகியனவற்றை உண்ணலாம். தோல் நோய் உள்ளவர் விளக்கெண்ணையை வாரம் இரு முறை உடலெங்கும் பூசி, ஊறின பின் கடலை மாவு, பயற்ற மாவு, இலுப்பை பிண்ணாக்கு போன்றவற்றைப் பயன்படுத்தி வர விரைந்து நலம் பெறலாம். (சோப்பு கூடாது). பசுவின் பால் காய்ச்சி, பனங் கற்கண்டு சேர்த்துப் பருகுதல் வேண்டும். வெள்ளைச் சர்க்கரையை விலக்குவதே நலம். இராசவல்லாதி போன்ற பெரு மருந்தை மருத்துவர் அறிவுரையில் பத்தியம் காத்து உண்ண வேண்டும். கடுமையான பிணிகளை வெல்லக் கடுமையான மருந்துகளும் தேவைப்படுகிறது. இதனைத் தக்க துணை மருந்துகளுடன் நமது சித்த மருத்துவ வித்தகர்கள் பயன்படுத்தி புகழும், பொருளும் பெற்றுச் சிறப்புறுவார்கள் என்பது திண்ணம்.

அளவு: காலை உணவுக்குப் பின் 2.5 கிராம் முதல் 5 கிராம் வரை உண்டு 200 மில்லி அளவு பசும் பாலுடன் வல்லாரை, ஆமலகம், வில்வாதி, மகாவில்வாதி, பறங்கிப் பட்டை, பஞ்சகவ்வியம் போன்ற மருத்துவர் தேர்வு செய்யும் ஒரு மருந்தை உண்ணலாம். சுண்ணலோகம், அன்னபவழம், மண்டூரம், இலிங்கம், மன்மத லோகம், பஞ்சபாடணம் ஆகிய செந்தூரங்களில் ஏதேனும் ஒன்று: இந்திராதி, திருமேனி, கதலி ஆகிய தீநீர்களில் ஏதேனும் ஒன்று சேர்த்தும், நோய் நிலை, உடல் நிலை அறிந்து மருத்துவர்கள் வழங்கலாம்.

Use & Dose:

Early stage of cancer, all types of tumours, leucorrhoea,Gonorrhoea, Carbuncies, Vaginal Disorders, Convulsions, Diabetes Mellitus, Facial paralysis, Patches, Scales, Cracks in feet, Anal fistula, Poisons of spiders, rats and scorpions, neurological disorders, penis ulcer and hemiplegia.

Dose: Adults 2.5 grams to 5 grams once a day (morning) for first week (7 days).

Vehicle: Cow’s milk

Adjuvants: VALLARAI, AMALAGAM, BILWATHI, MAHABILWATHI, PARANGIPATTAI, PANJAKAVIYAM (Any one as directed by physician). Every week stop this medicine for one day and take one or two teaspoon of castor oil (depending upon the patients) for purgation. After two weeks 2.5 to 5 grams two times a day with Cow’s milk along with above prescribed medicine. Purgation is an important purification treatment. It detoxifies the entire body. Once in a week take one or two teaspoonful of castor oil with or without black coffee and it in turn purgates. Avoid all medications during that day. All the rules given above must be strictly followed.

Only a Siddha physician can avail this drug without any side effects and save million of ailing people.

No comments:

Post a Comment