Search This Blog

Saturday, November 27, 2010

18 – வல்லாதிப்பருப்பு இளகம் – Vallathi Parupu Lehiyam

மூல நூல்: அனுபவ முறை Malai Sami Herbo Minerals

தீரும் நோய்கள், அளவும், துணை மருந்துகளும்:

உழைப்பாலும், மனச் சோர்வாலும், அதிகப் படியான சக்தி இழ்ப்பாலும், தாங்கள் வீரியமும், ஆண்மையும் விடைபெற்றுச் சென்று விட்டதாகக் கருதி, இளமையில் முதுமையின் முகமூடிக்குள் தங்களைத் தாங்களே புதைத்துக் கொண்டு விட்டவர்களுக்கும்.

இதோ மீண்டும் இனிய விடியல் இயற்கை எவரையும் வஞ்சிப்பதில்லை! இயல்பான நிலையில் வாழ்க்கை வாழ்வதற்கே! என்று உணர்த்தும் மூலிகைப் பொதிகையின் முகமலர்ந்த அழைப்பு! போதைப் பொருட்கள் இல்லை! உடல் நலத்துக்கு புறம்பான பொருட்களில்லை! வாதுமை, முந்திரி, அக்ரூட்டு, பிஸ்தா, சீமைத்தண்ணீர்விட்டான் கிழங்கு, பூமிச் சருக்கரைக் கிழங்கு, நிலப்பனை என ஆண்மைக்கு சிறகு முளைக்க வைக்கும் சித்த மருந்துகள், வாலுழுவை, வெட்பாலை, குங்குமப்பூ, தேன், பசுநெய் ஆகியன கலந்து நாடி நரம்புகளில் ஓடி முறுக்கேற்றி மணப்பேறு, மகப்பேறு வாய்ப்பளிக்கும் அமுதச் சுவையோடு, வல்லாதிப் பருப்பிளகம் என கிடைக்கிறது.

அளவு: 5 முதல் 10 கிராம் காலை உணவுக்குப் பின்னும் மாலையும்.

துணை மருந்து: பசும்பால், நரசிங்காதி, அசுவகந்தி, ஆகிய இளகங்கள், இலிங்கச் செந்தூரம், தங்கப்பற்பம், மன்மதலோகச் செந்தூரம் ஆகியனவற்றில் ஏதேனும் ஒன்றை துணை மருந்தாகக் கொள்ளலாம்.

Use & Dose:

Reputed in developing virility. This is blessing to those who debilitated excessive sex. Quickly develops sperm. This restores health which is lost through excessive spermatogenesis rapidly.

Dose: 5 – 10 gms. Twice a day.

Vehicle: Cow’s Milk.

Adjuvant: “Narasingadhi”, “Aswagandhi or “Manmathalokam Calx”, “Lingam Calx”, “Thangaparpam”

No comments:

Post a Comment