Search This Blog

Saturday, November 27, 2010

18 – வல்லாதிப்பருப்பு இளகம் – Vallathi Parupu Lehiyam

மூல நூல்: அனுபவ முறை Malai Sami Herbo Minerals

தீரும் நோய்கள், அளவும், துணை மருந்துகளும்:

உழைப்பாலும், மனச் சோர்வாலும், அதிகப் படியான சக்தி இழ்ப்பாலும், தாங்கள் வீரியமும், ஆண்மையும் விடைபெற்றுச் சென்று விட்டதாகக் கருதி, இளமையில் முதுமையின் முகமூடிக்குள் தங்களைத் தாங்களே புதைத்துக் கொண்டு விட்டவர்களுக்கும்.

இதோ மீண்டும் இனிய விடியல் இயற்கை எவரையும் வஞ்சிப்பதில்லை! இயல்பான நிலையில் வாழ்க்கை வாழ்வதற்கே! என்று உணர்த்தும் மூலிகைப் பொதிகையின் முகமலர்ந்த அழைப்பு! போதைப் பொருட்கள் இல்லை! உடல் நலத்துக்கு புறம்பான பொருட்களில்லை! வாதுமை, முந்திரி, அக்ரூட்டு, பிஸ்தா, சீமைத்தண்ணீர்விட்டான் கிழங்கு, பூமிச் சருக்கரைக் கிழங்கு, நிலப்பனை என ஆண்மைக்கு சிறகு முளைக்க வைக்கும் சித்த மருந்துகள், வாலுழுவை, வெட்பாலை, குங்குமப்பூ, தேன், பசுநெய் ஆகியன கலந்து நாடி நரம்புகளில் ஓடி முறுக்கேற்றி மணப்பேறு, மகப்பேறு வாய்ப்பளிக்கும் அமுதச் சுவையோடு, வல்லாதிப் பருப்பிளகம் என கிடைக்கிறது.

அளவு: 5 முதல் 10 கிராம் காலை உணவுக்குப் பின்னும் மாலையும்.

துணை மருந்து: பசும்பால், நரசிங்காதி, அசுவகந்தி, ஆகிய இளகங்கள், இலிங்கச் செந்தூரம், தங்கப்பற்பம், மன்மதலோகச் செந்தூரம் ஆகியனவற்றில் ஏதேனும் ஒன்றை துணை மருந்தாகக் கொள்ளலாம்.

Use & Dose:

Reputed in developing virility. This is blessing to those who debilitated excessive sex. Quickly develops sperm. This restores health which is lost through excessive spermatogenesis rapidly.

Dose: 5 – 10 gms. Twice a day.

Vehicle: Cow’s Milk.

Adjuvant: “Narasingadhi”, “Aswagandhi or “Manmathalokam Calx”, “Lingam Calx”, “Thangaparpam”

Thursday, November 25, 2010

இளகங்கள் (அ) இலேகியங்கள் – 20 : 17 – நரசிம்ம இளகம் – Narasimha Lehiyam

மூல நூல்: அனுபவ முறை Siddha Proprietary Medicine – Malaisamy Herbo Minerals

தீரும் நோய்கள், அளவும், துணை மருந்துகளும்:

இது “இராசவல்லாதி” தொகுப்பில் இன்னும் ஒரு இனம். இது இளைய உடலினருக்காக, உணவுக்கட்டுப்பாடு மருந்தளவு அனைத்தும் மேற்கூறிய “இராசவல்லாதி” போலவே கடைப் பிடிக்கவும்.

Use & Dose:

Same as “Rasavallathi”

Thursday, November 18, 2010

16 – ரிலாக்ஸ் – Re-lax

மூல நூல்: அனுபவ முறை Malai Sami Herbo Minerals

தீரும் நோய்கள், அளவும், துணை மருந்துகளும்:

மலச்சிக்கல் ஒன்றே உடலில் பல சிக்கல்களை உருவாக்குவது. குடற் புண்கள், மூலம், கொப்புளங்கள், முகத்தின் நிறம் மங்குதல், காமாலை, நாட்பட்ட சுரங்கள், அமிலச்சுரப்பு நஞ்சு, வாந்தி, மண்ணீரல் வீக்கம், சீரான மண்டலச் சீர்கேடுகள், குறுமி, மூட்டுவாதம் ஆகிய அனைத்து நோய்களிலும், குடல் சுத்தமின்றி உடல் சுத்தம் பயன் தருவதில்லை. கடுமையான நோயில் வமனம் எனப்படும். (கக்கல்) வாந்திக்கு ஏற்பாடு செய்த பின் சமனத்திற்கு (கழிச்சல்) தர வேண்டும் என்று சித்தர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

அளவு: 5 முதல் 7 கிராம் இரவு உணவுக்குப் பின்பு வெந்நீர் குடிக்கவும்.

Use & Dose:

All kind of gastric ulcers, piles, boils, chronic fever, jaundice, ascites, vomiting, splenomegaly, intestinal diseases, worm infestation and arthritis.

Dose: 5 – 7 gms once a day at bed time.

Vehicle: hot water.

Monday, November 15, 2010

15 – மகளிர் நல்வாழ்வு இளகம் – Magalir Nal Vazhvu Lehiyam

மூல நூல்: சிகிச்சா ரத்ன தீபம் Sigicha Rathna Deepam

தீரும் நோய்கள், அளவும், துணை மருந்துகளும்:

மகப்பேறு இல்லாமல் மனம் வருந்தும் மகளிருக்கு இது ஒரு மூலிகை வரம். மாத விலக்கு, வெள்ளை, வெட்டை, வெப்பு, நீங்கி உடல் குளிர்ச்சி பெறும். கருப்பாசயப் புண்கள் ஆறும். மகப்பேறு அடைந்தவுடன் மருந்தை நிறுத்தி விட வேண்டும். மூலம், நீர்ச்சூடு, நீர்ச்சுருக்கு ஆகிய குறைபாடுகளும் நீங்கும்.

அளவு: 5 முதல் 25 கிராம் காலை உணவுக்குப் பின்னும், மாலையும்.

துணை மருந்து: மூசாம்பர மெழுகு, நரசிங்காதி, ஆமலகம், கடுக்காய், வல்லாரை, வல்லாதிப் பருப்பிளகம், பசுவின் பால், தண்ணீர் இவை ஏதேனும் ஒன்றின் துணையுடன் உண்ண மகப்பேறு, மணப்பேறு வாய்க்கும்.

Use & Dose:

It is an ultimate tonic especially for females. It provides a comfortable journey from menarche to menopause. It is chief remedy for female infertility, menorrhagia, metarrhagia and other gynaecological disorders, urinary disorders and piles.

Dose: 5 – 25 gms. Twice a day.

Vehicle: Cow’s milk or water.